லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மேரி லூமியர (Auguste Marie Louis Nicolas Lumière) மற்றும் லூயிஸ் ஜீன் லூமியேர (Louis Jean Lumièr) ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்களது பத்து குறும்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இவர்களது முதல் சலனப்படமான Sortie des Usines Lumière à Lyon (Workers Leaving the Lumière Factory)ம் இதில் அடங்கும். ஒவ்வொரு படமும் 17 மீட்டர் நீளம் கொண்டது. 46 நெடிகள் ஓடக்கூடியது. இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.
nrajas பதிப்பித்தது.